1990களில் பல குடும்பங்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னாட்களில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பலர் நீதிமன்றத்தில் கௌரியோடு என்னைச் சந்திக்க வந்தார்கள். அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளள தமது அன்புக்குரியவர்களை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் மிகைப்பட்டிருந்து. அப்போது கௌரி அவர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் “சட்டரீதியாக அவர்களை மீட்டெடுக்க உண்டாகும் அனைத்துச் செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்பதுதான். பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் தொடர்பான அவரது அணுகுமுறை மிகவும் ஆச்சரியமானது.
இலங்கையில் மனித உரிமைகள் சார்ந்து நீதித்துறைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியவர் அவர். அந்நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட சில பலமான அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்தன. ஆனால் பயங்கரவாத சந்தேக நபர்களாக அல்லது அரசுக்கு சவால் விடுக்கும் சக்தி வாய்ந்த மனிதர்களாக தமிழ்க் கைதிகள் பார்க்கப்பட்டபோது அத்தகையவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தைரியமும் ஆற்றலும் பல பேர்களுக்கு இருக்கவே இல்லை. 2006ஆம் ஆண்டு வரை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான கைதிகளிடம் இருந்து சுயசார்பு விளக்கங்களைப் பெறுவதற்கான பிரதிநிதியாகச் செயற்படுகையில் அந்த குடும்பங்களுடனான உரையாடல் முரண்பாடு, இனப்பாகுபாடு அல்லது இலங்கை அரசியல் பற்றிய எந்த ஒரு முறையான கற்றலுக்கும் அப்பாற்பட்டு அமைந்திருந்தது. கௌரி அந்த மக்களுக்காக உண்மையாகவே கவலைப்பட்டார். நிபந்தனையின்றி பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் எழுந்து நின்றார். அது மட்டுமல்ல நாட்டின் எந்தப் பகுதியிலும் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அச்சமின்றி வழக்குப் பதிவு செய்தவராக அறியப்பட்டார். எனது ஆரம்பகால தொழில் வாழ்க்கையில் நாடு முழுவதும் உள்ள கைதிகளுடன் பேசுவதற்கு சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் அடிக்கடி சந்தித்த வழக்கறிஞர்களில் கௌரி இருந்தார். எங்கள் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்ட அமைப்பின் தோல்வியை சந்தேகநபர்களுக்கு எதிரான பிடியை முறையாகவும் எளிதாகவும் தீர்மானிக்க முடியும். அப்போதெல்லாம் கைதிகள் அல்லது தடுத்துவைக்கப்பட்டவர்களின் சமூகச் சார்பை அவர் ஒரு போதும் கருத்தில் கொண்டதில்லை. ஆயுதங்களை மீட்கும் போர்வையில் நிராயுதபாணிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கொடூரமாக கொன்றதற்கெதிராக வெளிப்படையாகப் பேசியவர் கௌரி. என்மீது வெள்ளைவேன் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே பல சமயங்களில் அவர் என்னை எச்சரித்தார்.
2008ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் என்னுடனும் ஜனாதிபதி சட்டத்தரணி திரு ரொமேஷ்டி சில்வாவுடனும் கௌரியும் ‘பயங்கரவாத வழக்கறிஞர்’ எனப் பட்டியலிடப்பட்டிருந்ததை பின்னர் கண்டறிந்தேன். கௌரி பல தளங்களிலும் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றிச் செயற்பட்டார். மற்றவர்களுக்கு அவரைப் போல் கொடுப்பதில் திருப்தி காண்கின்ற ஒருவரை நான் எனது தலைமுறையில் காணவில்லை. அவருடைய பெருந்தன்மையிலும் கொடையிலும் பலநூறு பேர் வாழ்ந்தார்கள். பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக அவர் எப்படியெல்லாம் தன்னை வருத்திக் கொண்டார் என்பதில் ஒரு சிலதை மட்டுமே ஹல்ட்ஸ்ரொப் வளாகம் அறியும். கொழும்பில் இருந்து சட்ட ஆவணங்களை தயாரிக்கும் போது சேவைபெறுநர்களிடம் நடந்துகொண்ட முறை மிகவும் மனிதாபிமானமிக்கது. அவர்கள் கொழும்பிலிருந்து புறப்படும் போது அவரே அவர்களை கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு பயணத்துக்காக கை நிறைய பணத்தையும் கொடுத்தார். அவர்கள் இலக்கை அடையும் வரை அவர்களைப் வழிநடாத்தத் தவறவில்லை அதுமட்டுமல்லாமல் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் வரை தொழிலதிபர்கள் முதல் போலீஸ்காரர்கள் வரை சாதாரண குடிமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலதரப்பட்ட பின்னணியில் உள்ளவர்கள் தங்கள் குறைகளை பகிர்ந்து கொள்ள அவரை நம்பினர் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அதிகாரமுள்ளவர் முதல் சக்தி அற்றவர் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான வரவேற்பு அவரிடம் இருந்தது. இந்தச் சிறிய புகழ் அஞ்சலியை முடிக்க அதிகம் அறியப்படாத ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறேன் நாங்களும் கௌரியின் உபசரிப்பில் பயனடைந்தவர்களே. 2008ஆம் செப்டம்பர் 24ஆம் திகதியன்று தெரியாத இராணுவ முகவர்களால் எனது வீடு வெடிகுண்டு வீசப்பட்ட போது எங்கள் குடும்பத்தினர் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பான வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். எனது குறுநடை போடும் குழந்தை மற்றும் கைக்குழந்தைகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதற்காக அவர் அதிக ஆர்வமாக இருந்தார், மேலும் எங்கள் அனைவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வாரக்கணக்கில் கவனித்துக் கொண்டார். அந்த பயங்கரமான நாளில் எங்கள் வீட்டை வந்தடைந்த முதல் நண்பர்கள் குழுவில் அவரும் ஒருவர். இதே போன்ற சூழ்நிலைகளில் பலரை அவர் கவனித்துக் கொண்டார். உங்கள் எல்லையில்லா கருணைக்கும் உண்மையான நட்புக்கு நன்றி கௌரி.
எங்களின் குடும்பத்தில் எப்போதும் பிரிக்க முடியாத குடும்ப உறவாகவே கௌரியும் தவராசாவும் இருப்பார்கள். தோல்வியடைந்த நாட்டின் நிருவாக இயக்கத்தில் மிகச் சிறந்த ஒரு மனிதாபிமானியை இந்தத் தொற்று நோய் பறித்துக் கொண்டது. சென்று வாருங்கள் வாருங்கள் கௌரி மீண்டும் நாம் சந்திக்கும் வரை.
ஜே.சி. வெலியமுன
ஜனாதிபதி சட்டத்தரணி