என் உடன்பிறப்பானாய் அது
இறைவன் அருளிய கொடை
நம்ப மறுக்குது என் நெஞ்சம். நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை என் அன்பு
அக்கா ஷங்கரி இன்று எம்முடன் இல்லை என்று. சிறு பிள்ளைகளாய் நாம் ஒன்றாக
வாழ்ந்தோம், சிரித்து மகிழ்ந்தோம், சண்டையிட்டோம், அழுதோம், அரவணைத்தோம்
ஒருவரையொருவர். எங்களது கனவுகளைப் பகிர்ந்தும் கொண்டோம்.
ஷங்கரி என் சகோதரிக்கும் மேலாக என்னுடைய நண்பி. அவள் அற்புதமானவள்,
அன்பானவள், வலிமையானவள், மன்னிப்பவள். என் உடன்பிறப்பாய் எனக்குக் கிடைக்க
நான் என்ன செய்தேனோ எனக்குத் தெரியாது. அது இறைவன் அருளிய கொடை.
எங்களது உறவின் இனிய அனுபவங்களை மீட்டுப் பார்க்கிறேன். நெஞ்சுகனக்கிறது.
தூரத்திலிருந்தாலும் ஒருதொலைபேசி அழைப்புத் தொலைவில் தானே இருந்தோம்.
அவ்வப்போது உரையாடி மகிழ்ந்தோம் அல்லவா? எங்கள் சந்தோஷத்தில் மகிழ்ந்தாயே.
எங்களது கஷ்டங்களில் கைகொடுத்தாயே. இனி நான் என்னசெய்வேன்? உங்களைப்
பற்றிய நினைவுகள் என்னைத் துன்புறுத்துகின்றன. ஆனால் அவை எனக்கு ஆறுதலையும்
நம்பிக்கையையும் தருகின்றன்றோ! ஷங்கரி இல்லாமல் என் வாழ்க்கையைக் கற்பனை
செய்து பார்க்க என்னால் இயலவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் அவளுக்காய்
இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மறுவாழ்விலும் சகோதரிகளாகவே பிறப்போம்.
உங்கள் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் பெறட்டும் என என்னோடு சேர்ந்து கலாதரனும்
அன்புப் பிள்ளைகள் பிறிந்தா, பிறீத்தா, பிரியனும் பிரார்த்திக்கிறார்கள்.
என்றும் உங்கள் தங்கை
விஜி
ரொறன்டோ, கனடா