சட்டத்துறையின் சரித்திர நாயகியே
உம் சாதனைகள் பார்புகழும் அம்மா
சட்டவாட்சி இருள் கொள்ளும் போது
நீதிக்கான உம் போர்வாளின் ஓசை
எங்கணும் எதிரொலித்தது
சாமர்த்தியமும் சாதுரியமும்
உங்கள் சாதனைகளில் வாயிலில்
சாதனைப்பெண் ஜோதியாய்
உங்கள் நாமம் நிலைபெற்றாயிற்று
அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்
ஆன்றோரும் சான்றோரும் போற்றும்படி
ஆரம்ப நீதிமன்று முதல் உச்சநீதி மன்று வரை
ஆளுமையின் பெருவிம்பமாய்ப் படிந்தீரே தாயே…
கடமை தவறாத கண்ணியம் உம் பாதை எங்கணும் பட்டு விரிக்க
உம் கம்பீரக் குரல் கணீர் என ஒலித்தது காலம்; முழுதும்.
உம் வழக்குகளின் செம்மையும் கோப்புகளின் நேர்த்தியும்
காலாதி காலமாய் வெள்ளிக்கோடாய் ஒளிரும்.
இணையில்லா இலக்கியப் பிரியராய்
இன்முகம் மலரும் இன்சொல் பேசியே
இயன்றவரை இரப்போர்க்குதவி
இனிதான இல்லத்தரசியாய் எழில் பெற்று
இன்னா செய்தாரை ஒறுத்து இனிதாய் நன்னயம் செய்து
இலட்சியங்கொள் முன்மாதிரியான சரித்திரமானீர்.
அர்ப்பணிப்பைத் தாரக மந்திரமாக
அனைத்தின மக்களுக்காய் அந்தம்வரை
வழக்குகளுக்காய் வாழ்வை அர்ப்பணித்து
அகிலம் போற்றும் நீதியின் தேவதை வடிவாய் நீங்கள்…
அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரமங்கை உம்மிடம்
அருகிலிருந்து நாம் கற்றநுணுக்கங்கள் பல
எமைப் புடம்போட நீங்கள் கையாண்ட வழிமுறைகளே வடிவு
உம் நினைவுகளை என் நெஞ்சிலிருத்தியபடி
தர்மராஜா தர்மஜா
கனிஷ்ட சட்டத்தரணி