மனித குலத்தின் மீது மிகுந்த கருணையும் மனிதாபிமானமும் கொண்ட பெண்மணியாக கௌரியை நான் புரிந்து கொண்டேன். தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம் அவர் எங்கள் இதயங்களில் தனக்கான சிறந்த இடத்தைப் பிடித்தார். தன்னை நாடி வருபவர்கள் தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களா? இல்லையா? என்பது அவருக்குத் தேவையற்றது. எல்லா மனிதர்களுக்கும் ஆறுதல் கூறுவதும் குறைகளில் இருந்து அவர்களை விடுவிப்பதும்தான் அவருடைய இறுதி நோக்காக இருக்கும். சட்டத்தரணியாக எனது தொழில் வாழ்க்கையை மாத்தறை நீதிமன்றில் ஆரம்பித்தேன். 1989இல் நிகழ்ந்த எனது திருமணம் என்னைக் கொழும்புக்கு வரச் செய்தது. நான் வழக்கறிஞராக புதுக்கடையில் தொழிலை ஆரம்பித்தேன். போதியளவு வழக்குகள் இல்லாததால் சட்டத்தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. இந்த உதவியற்ற கால என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது நான் கௌரியை சந்தித்தமைதான். அந்த சந்திப்பு எனக்கு ஓர் ஆசீர்வாதம். கௌரி பெருந்தன்மை மற்றும் கருணையின் உருவகமாக இருந்தார். அவர் பணிபுரிந்த அலுவலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்தி என் தொழில்முறை பாதையைத் தெளிவுபடுத்தினார். சரியான வார்த்தைகளிற் சொல்வதாயின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வழக்கறிஞராக எனது நடைமுறையைக் கட்டியெழுப்ப அவர் ஒரு துணைத் தூணாக இருந்தார்.
இன்னும் சொல்லப்போனால் தனது சகோதர பாசத்தின் அரவணைப்பை என்னிடம் காட்டினார். கௌரியின் குணங்களும் அவரது பணிகளும் விவரிக்க முடியாத வகையில் போற்றத்தக்கவை. அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முறை மற்றும் மனித நேயத்துடனான ஒரு வழக்கறிஞராவார். வழக்குகளுக்கு அதிகபட்சம் நீதியை வழங்குவதற்கு அவர் தனது நேரத்தையும் அறிவையும் தொழில்முறை நேர்மையையும் அர்ப்பணித்தார் அவர் தனது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு கே. வி. தவராசா வின் அன்பான மனைவியாகவும் அவருக்குப்பின்னால் நிழலாகவும் இருந்தார். எல்லா ஊழியர்களும் உறவுகளும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பான பிணைப்பு மற்றும் பரஸ்பரநல்லுறவு ஆகியவற்றை கண்டனர். பெற்றோர், உடன்பிறப்புகள், மாமனார் மாமியார் உட்பட அனைத்து உறவுகளுக்கும் தனது கடமையைச் சரியாகச் செய்துவந்துள்ளார்.
அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
சுஜாதா அழகப்பெரும
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி