வரலாறு கூறும் உங்கள் வாழ்க்கை
வரலாறு கூறும் உங்கள் வாழ்க்கையிலே
வசந்தங்கள் வீசியதை நாம் அறிவோம்
பிரபலமான சட்டவாளராக இலங்கையிலே
பேசிவந்த காலங்களையும் நாம் அறிவோம்
அன்பாலும் பண்பாலும் அனைவரையும்
அரவணைத்து உதவியதும் நாம் அறிவோம்
சிறிய தாயாக இருந்து எமக்கு
செய்துவிட்ட உதவிகளையும் நாம் மறவோம்
கொரோனா என்ற கொடிய தொருவைரஸ் – உலகில்
கோடி கோடியாக மனித உயிரைப்பலி எடுக்க
சின்னம்மாவின் உயிரும் கொரோனாவுக்குள்
சிக்கித்தான் எம்மை விட்டுப்பிரிந்ததுவே
பட்டமரம் ஒரு போதும் தளிர்ப்பதில்லை
பகல்வாணர் திசை மாறி உதிப்பதில்லை
விட்ட இலை மரத்தை வந்து சேர்வதில்லை
விதியாரையும் விட்டு மட்டும் வைத்ததில்லை
பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதியானாலும்
மறைந்த எங்கள் சின்னம்மாவை
கோடி ஆண்டுகள் சென்றாலும்
மறந்திடுமோ எங்கள் இதயம் உங்களை
செந்தில்ராஜா குடும்பம் பிரான்ஸ்