அகிலம் சூழ் கொண்ட
ஆற்றொணா பிணியால்
இமைக்கும் நொடியில்
இறையடி தழுவிக் கொண்டீர்
ஈன்ற பொழுதினும் உவந்து போயினர்
உம்மை ஈன்றோர்..
ஊர் புகழும் சேவையால்இ
எம்மாலும் இயலவில்லை
ஏற்றத்தின் விளிம்பில் நீர் நின்ற போதும்
ஐயம் சிறிதுமின்றிஇ
ஒழுக்கத்தின் விளைநிலமாய்
ஓங்கி நின்ற உம் நடத்தைஇ
ஓராண்டு கடந்து மட்டுமல்ல
நீதி தேவதையின் கரங்களுக்கு
வலு சேர்த்த உன் பணி
ஆண்டாண்டு காலம் வாழும் .
ஆறுதலோ அஞ்சலியோ
உம்மிடத்தை எம் மனங்களில் அத்தனை சுலபமாய்
நிரப்பிட இயலாது போயினும் நீதியுள்ள வரை
நின் புகழ் வாழும் என்பது திண்ணம்.
நீர் விதைத்த விதைகளில் துளிர்விட்டவளாய் இன்று நான்..
பிருந்தா சந்திரகேஷ்
கனிஷ்ட சட்டத்தரணி