துணிகரமாக நிமிர்ந்து நின்ற இரும்புச் சீமாட்டி

படு பயங்கரகோவிட் 19 ஆல் இழந்துவிட்ட சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசாவின் இழப்பால் ஆழ்ந்த துயரடைந்தோம். தொழில் நிபுணத்துவத்துக்கோ சட்டவாட்சிக்கோ பிரச்சினை அல்லது அச்சுறுத்தல்கள் வரும்போதெல்லாம் துணிகரமாக நிமர்ந்து நிற்கும் இரும்புச் சீமாட்டி அவர். இருப்பினும் தன்னடக்கமான மனிதாபிமானி. தொலைபேசி அழைப்புகளுக்கு தவறாது பதிலளிக்கும் பண்பாளர். சட்டவளாகத்தில் பெரும் நிரப்பமுடியா வெற்றிடத்தை விட்டுச்சென்றுவிட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரஜீவ் அமரசூரிய
சட்டத்தரணி
முன்னாள் செயலாளர் – இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்.