உங்கள் புகழ் உலகளாவியது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் அதற்கிணங்க நான் அவரைப் பார்த்த முதல்
கணமே எனக்கு அவரைப் பிடித்துப் போனது. இவ்வளவு பெரிய சாதனை செய்யினும்
அவர் முகத்தில் ஒரு துளி பெருமையையும் கண்டதில்லை. எப்போதும் சிரித்த முகத்துடன்
இருப்பார். என்னைப் பெண் பார்ப்பதற்கு என வீட்டாரைத் தன் மாளிகைக்கு வரும்படி
அழைப்பு தந்திருந்தார்.
எனது அம்மாவுடன் என் இரண்டு அண்ணன்மார்கள் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம்.
அப்போது எம்மை கவனித்த விதம் கண்டு திகைத்தேன். அவரின் ஆசீர்வாதத்துடனும்
உடன்பாட்டோடும் என் திருமணம் நடந்தேறியது.
உறவுகளைக் கவனிப்பதில் அவர் ஈடுபாடுகாட்டும் விதம் ஆச்சரியப்பட வைக்கும். அவர்
பிள்ளைகளைக் கொஞ்சும் விதமே மனதைக் கொள்ளை கொள்ளும்.
அவரை இரும்புப் பெண்மணி எனப் பத்திரிகைகளும் ஊடகங்களும் புகழ்மாலை பாட
அவரது சகோதரிகள் “உம்மால் எமக்கு எவ்வளவு பெருமையடி” என்று தலையில் தூ
க்கிவைத்துக் கொண்டாட அவர் ஒரு புன்னகைiயை மட்டும் உதிர்த்தார்.
இலங்கையின் இரும்புப் பெண்மணி உங்கள் புகழ் உலகளாவியது உங்களுக்காகவே
உலகமே அழுகிறது.
மருமகள்
நிதர்சனா பிரான்ஸ்