ஆருயிர் நண்பிக்கு!!
பள்ளிக்கூட சினேகிதியே
பாதியிலே சென்றது ஏன் –
ஐம்பது வருடங்கள் அன்போடு பழகிவந்தோம்
குடும்பங்கள் வந்தபின்பும் நம் சினேகிதம் குறையவில்லை
என் குடும்பம் உன் குடும்பம் வேருரிபார்த்ததில்லை
என் பிள்ளைகள் எப்போதும் உன் பிள்ளைகள் தானன்றோ
கண்ணுறங்கும் போதிலுமே – உன் கனிந்த முகம் தெரியுதம்மா
மண்ணைவிடடு உன்னையுமே காலனவன் பிரித்துவிட்டான்.
என்னதான் பிரிந்தாலும் – உன்னை
இம்மையில் மறப்பேனோ
என் கண்மூடும் வேளைவரை – உன் நினைவுடன் இருப்பேனே
பழகிய நாட்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கின்றேன்
அழகிய தருணங்களை அசைபோட்டுப் பார்க்கின்றேன்
உன்னைப் பிரிந்து தவிக்கின்ற அண்ணனுக்கு என்ன செய்வேன்
என்னவென்று நான் சொல்லி ஆறுதல் அடையு வைப்பேன்
கடைசி நேரத்திலும் – உன் கனிந்த முகம் பாராமல்
நொந்து நின்றேன் நித்தமும்தான்.
பிழாவளையான் பாதத்தை பணிந்து நிற்கும்
பால்ய சிநேகிதி
மலர் இராமநாதன்