அம்மாவுக்கு நிகராக அன்பு காட்டியவர் அண்ணி
1983ஆம் ஆண்டு இனக்கலவரம் ஒன்று இடம்பெறும் வரைக்கும் அண்ணன் தவராசாவுடன்
தான் எனது அதிகமான காலம் கழிந்திருக்கும். பிரச்சினைகள் தொடங்கிய பின்னர்தான்
ஒவ்வொருவரினதும் அடுத்தவர் மீதான அன்பின் மொத்த மதிப்பீட்டையும் செய்ய
முடியுமாக இருக்கும். காரணம் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிக் கவலைப்படக்கூடிய
நிலையில் அடுத்தவர்களைக் குறித்து அவ்விக்கட்டான நிலையிலும் கவலை கொள்ளும்
மனம் வாய்ப்பதே பெரும் பாக்கியம்தான். அப்படித்தான் எனது அண்ணி. அவர் அதிகமாக
மற்றவர்களைப் பற்றியே யோசித்தார். அந்த அன்பில் அன்னைக்கு நிகரான நிலையிருக்கும்.
அண்ணி என்னைத் தன் பிள்ளையாகவே கவனித்துக் கொண்டார்.
கலவரம் நிகழ்ந்த போது நான் பொரளையில் இருந்து புறக்கோட்டைக்குப் போய்க்
கொண்டிருந்தேன். ஆனந்த கல்லூரிக்கு அருகில் வைத்து தமிழ் இளைஞர்கள் அனைவரும்
தாக்கப்பட்ட போது நான் தெய்வாதீனமாக அவர்களிடம் மாட்டிக்கொள்ளவில்லை. நான்
கலவரத்துக்குள் அகப்பட்ட செய்தி வீட்டார்க்குத் தெரியவந்தபோது அதிகம் பதைபதைபுற்றவர் அண்ணிதான்.
கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வரை அவரது முழு அவதானமும் என்மீதே
இருந்தது. என்னை எங்கும் அசையவிடவில்லை. கண்டிப்பான அம்மாவாக அவர்
அப்போது தென்பட்டார். எதைச் செய்தாலும் அதில் மற்றவர்க்குப் பயன் இருக்கும் படியாகப்
பார்த்துக்கொள்ள வேண்டும் என்பார். சொல்வது போலவே இறுதிவரை வாழ்ந்தும்
காட்டினார். எங்கள் குடும்பத்தில் அவருக்கு இருந்த இடமும் அம்மாவுக்கு நிகராகத்தான்
இருந்தது. அம்மாவின் மரணத்துக்குப் பின்னர் அண்ணிதான் எங்களுக்கான ஆறுதலாக
மாறியிருந்தார்.
அண்ணன் ஒரு போதும் அண்ணி குறித்து அதிர்ந்து கதைத்ததில்லை. அந்தளவுக்குப்
பக்குவமாக அனைத்து விடயங்களிலும் மிகவும் தெளிவான பார்வையுடன் கவனம்
செலுத்தியவர் அண்ணி. அண்ணனுக்கு எல்லாவிதத்திரும் அவர் துiணாயக இருந்தார்.
நாங்கள் அண்ணனை விட்டுப் பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட பின்னர் நாங்கள்
இல்லாத இடைவெளி ஒரு போதும் அண்ணனுக்குத் தெரியாதபடி இருக்கக் காரணமே
எங்கள் அண்ணியின் உண்மையான கலப்படமற்ற அன்புதான்.
வேலாயுதபிள்ளை கனகராசா
மைத்துனர்
சுவிஸ்