துணிந்து போராடுவது அவருடன் பிறந்தது
மதிப்பு மிக்க என் அன்புத் தங்கை கௌரிசங்கரியுடன் கூட பிறக்க என்ன புண்ணியம்
செய்தேனோ தெரியவில்லை. இன்று எங்கள் முழுக் குடும்பத்திற்கும் அழியாத
புகழைதேடித் தந்துவிட்டு, அவர் அமரத்துவம் அடைந்துவிட்டார். சின்னஞ் சிறுவயதில்
எனது தம்பிகளுடன் சண்டையிடும் போது கூட வாதாடி அவரது தரப்பு நியாயத்தை
நிருபித்து அவர்களுக்கு என் தாயிடம் தண்டனைவாங்கிக் கொடுத்துவிடுவார். என்றுமே
எதற்கும் அஞ்சியது கிடையாது. துணிந்து போராடுவது அவருடன் பிறந்தது. ஆச்சிக்கு
துணையாகப் போய் படுப்பது, அனாதையாக இருந்த மனநலமற்ற வயோதிப மாதுக்கு
உணவு கொண்டு போய்க் கொடுப்பது என்று கருணை நிறைந்த புரட்சி பெண்ணாகத்
திகழ்ந்தார். அளவெட்டியில் முதன் முதல் மிதிவண்டி பழகி அதில் பாடசாலைக்குச் சென்ற
பெண்ணாவார். எனது மகனின் திருமணத்திற்கு எல்லாப் பொறுப்புகளையும் தானே
சுமந்து முன் நின்று நடத்தினார். அவர் என்றும் எம் நினைவில் அழியாத தடமாகி நிற்பார்
கௌரி அக்கா, விக்கி அத்தான், கரன், நிதா, ஹரி, சிவானி
மொனாக்கோ. பிரான்ஸ்