கௌரி நீதிக்கான குரல்

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி பற்றிய நினைவுகள்

சட்டத்துறை சார்ந்த செயற்பாட்டாளர்களின் நெகிழ்ச்சி மிக்க உணர்வுக் கதம்பங்களாலும் அமரர் கௌரி சங்கரி தவராசா மீது அபிமானங் கொண்டவர்களின் ஆராதிப்புகளாலும் நண்பர்களின் நன்றிப் பெருக்காலும் அவரது சேவையைப் பெற்றுக்கொண்டவர்களின் நினைவுக் கீற்றுகளாலும் அழகு பெறுகின்றது. அமரர் கௌரி சங்கரி வாழும் போதே பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஆளுமை என்பதை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகள் மிக ஆழமாக நிலைநிறுத்துகின்றன.எமது பதிப்பகத்தின்18வது வெளியீடு இந்நூல். 

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் முதலாவது படைப்பாக்கம். இந்நூல் மூன்று முக்கிய விடயதானங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது மறைந்த சிரேஸ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசாவின் நினைவுகளைச் சுமந்திருக்கின்றது. இரண்டாவது பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிய தெளிவைப் பதிவு செய்திருக்கின்றது. மூன்றாவது இந்நாட்டில் பேசு பொருளாக இருந்த, இருக்கின்ற மிக முக்கியமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் பற்றிய பதிவுகள் போன்றனவே இந்நூலின் பெறுமதியைக் கணிப்பிடப் போதுமானவை

கௌரி: நீதிக்கான குரல்
ஆசிரியர் : கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி
முதல் பதிப்பு : 2022 அக்டோபர் 01
வெளியீடு : எஸ்.ஐ.எம்.பதிப்பகம்
வடிவமைப்பு அச்சுப்பதிப்பு : யுனி ஆர்ட்ஸ் (தனியார்) நிறுவனம், கொழும்பு- 13, இலங்கை
பதிப்புரிமை : எஸ்.ஐ.எம்.பதிப்பகம்

GOWRY VOICE FOR JUSTICE