சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் அர்ப்பணிப்புக்கள்

தாய் மண்ணில் பிறந்து
தலை நகரில் வாழ்நத் போதும் கூட – உன்
தளராத சேவை அனைத்தும்
தமிழ் மண் காப்பதற்கேக
தனித்து விடப்பட்ட
தாய் தந்தை இழநத்
தமர் பிறர் அறியாத
தனையன்களைக் காப்பதற்கு
இரவு பகலாக நீ செய்த சேவை
இரக்கமில்லா இறைவனுக்குத்
தாங்கவில்லை போலும்
உலகையே உலுக்கிய நோய்
உன்னையும் விட்டு வைக்கவில்லை
உற்றம் சுற்றம் உறவு சூழ்நது;
போற்ற வேண்டிய உன்னை
எட்டி நின்று பார்தது;
இமை மூடச் செய்ததுவே.
உன் பணிகள் அளவிட முடியாதவை
உன் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும்
அழியாப் புகழ் நிலைத்து நிற்கும்.
உறுதுணையாகக் கணவனைக் கொண்டு
தன்னம்பிக்கையை உற்ற துணையாக்கி
“குற்றமற்றவர்கள் நம் தனையன்கள்”
எனறு; வாதிட்ட உன் வலிமை –
வதைக்கும் உள்ளங்களை
மாளவிடாது தூக்கி நிறுத்தியது.
உன் நம்பிக்கையி;ல் வாழ்ந்தவர்கள்-
ஊசலாடிய அவ்வுறவுகள்.
சட்டப்புத்தகத்தின் –
நெழிவு சுழிவுகளையும்
ஓட்டை ஒடிசல்களையும் தட்டிப் பார்த்து
பெற்றுக் கொண்ட தேடல்களில்
வெற்றி நடை போட வைத்தாய்
தரம் பார்த்து
பயங்கரவாத தடைச் சட்டங்களை
தள்ளி உடைத்து – நம் இளைஞர்களுக்கு
விடி வெள்ளியாகவிருந்த வழக்குரைஞர் – நீ
முக்கிய வழக்குகளில் முதல் நிலையில் நின்று
வாதிட்ட உன் திறத்தால்
சட்ட வல்லுனராகி
சட்டப் புத்தகங்களில் இடம் பிடித்தாய்!
சட்டத்துறைக்கு உன்பணி
அளப்பரியது.
மங்காப் புகழையும்
மழுங்காத அறிவையும்
உன் குடும்பத்திற்கும்
தாய் நாட்டிற்கும்
தாரை வார்த்து சென்று விட்டாய்.
உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.

வே. இளஞ்செழியன் (செழியன்);
குளோபள் பணிப்பாளர்
“பூம்புகார்”
கரவெட்டி கிழக்கு
கரவெட்டி