புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரின் நினைவு அஞ்சலி

சர்வவல்லமை பொருந்தியவரும் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப் பெற்றவருமான கௌரிசங்கரிதவராசாவின் இழப்பு. ஈழத்தமிழர்களால் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என கௌரிசங்கரி தவராசா அவர்களின் நினைவாக கனடா அஞ்சலி நிகழ்வில் புகழாரம். 2021 ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி கொழும்பில் காலமான சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா அவர்களின் மறைவையொட்டி கனடாவில் இயங்கிவரும் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினர் கனடா ஸ்காபுறோவில் அஞ்சலி நிகழ்வொன்றை நடத்தினர். மேற்படி அஞ்சலி நிகழ்ச்சியை சங்கத்தின்சார்பில்அதன் செயளாளர்திரு.பகிரதன் தொகுத்து வழங்கினார். புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சிவாச்சாரியப் பெருமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.தவராசாவின் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் உரையாற்றினார்கள். அவர்களுடன் ஊடகவியளாளர் சார்பில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.என் லோகேந்திரலிங்கமும் உரையாற்றினார். அங்கு உரையாற்றிய அனைவரும் மறைந்த சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் ஆற்றலையும் மனிதநேய உணர்வையும் மற்றும் இன உணர்வையும் பாராட்டியும் வியந்தும் குறிப்பிட்டு சொல்லியும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். சிவாச்சாரியார்கள் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்இ சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார் குழுக்கள் மற்றும் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் உட்பட அங்கு உரையாற்றிய அனைவரும் மறைந்த சட்டத்தரணியான கௌரி சங்கரி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உடனேயே நீதிமன்றங்களில் ஆஜராகும் துணிவு மிகக் கொண்டவர் என்றும் தங்கள் உரைகளில் தெரிவித்தனர்.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்
கனடா