எமக்குள் தாக்கங்களை ஏற்படுத்தினார்
எனது வாழ்வில் நான் விரும்பி ரசித்த இரு இரும்புப் பெண்களில் ஒருவர் மறைந்த தமிழக
முதல்வர் ஜெ. ஜெயலலிதா. மற்றைய ஒருவர் கௌரிசங்கரி தவராசா. அவர் எனது சிறிய
தாயாக அமைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எனது சிறு பிராயத்தில் அவர்
கொழும்பிலிருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வருவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அவர்
வரும் வேளை நானும் எனது தம்பி ஹரனும் ஓடிப்போய் வாசலில் நிற்போம்.
அவர் காரிலிருந்து இறங்கும்போது அவருடைய அந்த நீண்ட கூந்தலும் தாவணியை
நீளமாக விட்டுப் புடவை அணிந்திருக்கும் அழகும் காலில் கொலுசு அணிந்து இசையோடு
அது அசையும் ஓசையும் நெஞ்சை அள்ளும். பார்ப்பதற்கு ஒரு சினிமா நட்சத்திரம்
போலவே காட்சி அளிப்பார். அவர் எம்மை நெருங்கி வந்து தன்னுடைய அழகிய அகன்ற
விழிகளை அசைத்து இனிமையாகவும் அன்பாகவும் பேசும்போது ஒரு தேவதை போலவே
தோன்றுவார்.
மிகச்சிறந்த ஆளுமையான சித்தி பலவழிகளிலும் எமக்குள் தாக்கங்களை ஏற்படுத்தினார்.
அவர் ஒரு வகையில் எமக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.
பின்னர் நான் ஜெர்மனியில் நடன ஆசிரியராக இருந்தபோது இவரை போலவே நீண்ட
கூந்தல், புடவை அணியும் விதம் என எல்லாவற்றிலும் சித்தியைப் பின்பற்றினேன்.
எனது அழகான சித்தி என்றும் என் மனதில் நீங்காது வாழ்வார். அவர் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
சுகன்யா
கனடா