அனுதாபச் செய்தி

திரு. தவராசா அவர்களே!,
உங்களுடைய அன்பிற்குரிய மனைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி. கௌரி சங்கரி தவராசா அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நான் மிகுந்த கவலையுடனேயே பங்கு பற்றுகின்றேன். அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்கள் தனித்துவமானதும் துணிவுமிக்கதுமான ஒரு சட்டத்தரணியாவர். போராளிகள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், கோவில் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், அரச பணியாளர்கள் போன்றோர்கள் சட்ட விரோதமான முறையில் கைது செய்து தடுத்து வைத்தல் தொடர்பான மனித உரிமைமீறல் வழக்குகளில் அவர் பங்கு பற்றியதுடன் அவ்வாறான வழக்குகளில் அவர் ஒரு முதன்மைச் சட்டத்தரணியாகவும் திகழ்ந்து வந்துள்ளார். அத்துடன் அவர் மனித உரிமைகள் பாதுகாப்பதற்கு துணிந்து போராடியதுடன் பல நீதிமன்றங்களில் மனிதாபமான ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தோன்றி எதிர்வாதம்மாற்றி அதில் வெற்றி கண்டு எல்லோரினதும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். தனது சேவையை நாடியோர்களுக்கு குறிப்பாக இயலாதோர்க்கும் தேவையை கண்டறிந்து அவர்களுக்காக மிகவும் திறமையாக சேவையாற்றியமை அவரின் தனிச் சிறப்பாகும். திருமதி. கௌரி சங்கரி தவராசா அவர்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தோன்றியதுடன் அவ்வாறான வழக்குகளில் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அவரமுக்கிய பங்கையும் வகித்துள்ளார். அவர் ஒரு சட்ட ஆலோசகராக மாத்திரமின்றி இளம் சட்டத்தரணிகளுக்கோர் வழிகாட்டுபவராகவும் தன்னிடம் பயில்கின்ற பல இளம் சட்டத்தரணிகளின் திறமையான ஒரு போதானாசிரியாகவும் இருந்து வந்துள்ளார். அவரின் இழப்பு இந் நாட்டு மக்களுக்கும் சட்டத்துறைக்கும் ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும். அமரர். திருமதி. தவராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


ரணில் விக்கிரமசிங்ஹ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதிஅனுதாபச் செய்தி