தமிழ்தேசிய அரசியத்துக்காக பல வழக்குகளை வாதாடி வென்ற சிரேஷ்ட வழக்கறிஞர் அமரர் கௌரி சங்கர் தவராசா!

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 2004, ம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு கிழக்கை சேர்ந்த 22, பாராளுமன்ற
உறுப்பினர்கள் அப்போது இருந்தோம். 2008இல் ஜேர்மனியில் புலம்பெயர் உறவுகளால் பொங்கு தமிழ் நிகழ்வு இடம்பெற்றது அதில் என்னை இலங்கையில் இருந்து அழைத்திருந்தனர் இந்த விழாவில் நான் உரையாற்றிய விடயத்தை அப்படியே வீடியோ (ஏனைநழ) எடுத்து இலங்கை புலனாய்வாளர்களுக்கு யாரோ ஒருவர் அனுப்பி இருந்தார். நான் இலங்கைக்கு திரும்பியபோது 2008, நவம்பர்,18, ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் 4ஆம் மாடியில் சுமார் எட்டு மணித்தியாலங்கள் நான் ஜேர்மனியில் உரையாற்றிய பேச்சை அப்படியே இணைந்தளத்தில் ஒளிபரப்பி வரிக்கு வரி நான் பேசியதன் விளக்கத்தை கேட்டு
வாக்குமூலம் பெற்றனர். இதன் பின்னர் எனக்கு எதிராக 2008 டிசம்பர் 05இல் எனக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு எதிராக பிறிதொரு அரசை நிர்மாணிப்பதற்காக பிரசாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நான் 2008 டிசம்பர் 07ஆம் திகதி இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒரு ஆலய வழிபாட்டுக்காக செல்வதற்காக
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்றபோது விமான நிலையம்தில் வழிமறித்து என்னை திருப்பி அனுப்பினர். இந்த விடயம் தொடர்பாக நானும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தங்கேஷ்வரி, செல்வம் அடைக்கலநாதன், சிவநாதன் கிஷோர் ஆகியோர் வழக்கறிஞர் கே.வி.தவராச அவரின் பாரியார் கடந்த 2021ஆண்டு, ஒகஸ்ட் மாதம் 23இல் இறையடி சேர்ந்த அமரர் கௌரி சங்கர் தவராசா அவர்களின் இல்லத்திற்கு சென்று விபரங்களை கூறினோம். எந்த தடைகளும் இன்றி முகமலர்சியுடன் இந்த வழக்கை தாம் ஏற்று நடத்துவதாகவும், தைரியமாக இருக்குமாறும், ஜேர்மனியில் நான் பேசிய ஒளி வடிவத்தை எடுத்து தருமாறும் கூறினார். நான் ஒருவாரத்தால் அந்த வீடியோவை (ஏனைநழ) எடுத்து கொடுத்தேன். பின்னர் அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இரண்டு தவணையுடன் வழக்கு எமக்கு சாதகமாக 2009, ஜனவரியில் தீர்ப்பு வழங்கப்பட்டது, வழக்கு தீர்ப்பு கிடைத்து மறுநாள் நானும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவநாதன் கிஷோர், தங்கேஷ்வரி ஆகிய ஆறுபேரும் அவரின் இல்லத்திற்குச்சென்று நன்றியறிதலை கூறிய பின்னர் மாவை வழக்கறிஞர் தவராசாவையும், அவரின் துணைவியார் கௌரி சங்கரையும் தனியாக அழைத்து இரகசியமாக வழக்குக்குக்கான செலவுகள் தரவந்துள்ளோம் என கேட்டார். உடனே வழக்கறிஞர் கௌரி சங்கர் மற்றும் கணவர் தவராசா இருவரும் சத்தம்போட்டுக்கொண்டு வெளியில் வந்து கைகளை கூப்பி வணங்கி எந்தப்பணமும் எமக்கு தரவேண்டாம் இது தமிழ்தேசியத்திற்காக நாங்கள் செய்கின்ற பணி எனக்கூறி எம்மை திருப்பி அனுப்பினர். அது எனது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று அந்த வழக்கில் நான் விடுதலை பெறாமல் இருந்திருப்பின் வெளிநாட்டு தடைமட்டுமல்ல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தண்டனைகளையும் சிலவேளை பெற்றிருப்பேன். எமது வழக்கு மட்டுமல்ல என்னைப்போன்ற பலரின் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் பலதை பணம் பெறாமல் வழக்கறிஞர் அமரர் கௌரி சங்கர் தவராசா வாதாடி விடுதலைகளை பெற்றுக்கொடுத்தவர் என்பது பலருக்கு தெரியும். இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு கிளை தலைவராக வழக்கறிஞர் கே.வி.தவராசா அவர்கள் இன்றுவரை எந்த தளம்பலும் இல்லாமல் தமிழ்தேசிய கொள்கைக்காக பணிபுரிந்து கொண்டுள்ளார். ஒரு தடவை இலங்கை தமிழரசு கட்சி மத்திய குழுக்கூட்டம் கொழும்பில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றபோது அவரின் துணைவியார் அமரர் கௌரி சங்கர் தவராசா அவர்களும் மதியபோசன உணவுகளை அவரின் இல்லத்தில் கலந்துகொண்ட 60, மத்திய குழு உறுப்பினர்களையும் வரவேற்று உபசரித்த அந்த நாளை மறக்கமுடியாது. மனிதனின் இறப்பு என்பது எப்போது எவ்வாறு இடம்பெறும் என்பது எவருக்குமே தெரியாது 65, வயதில் ஆளுமையுடன், சட்டத்துறையில் சாதனை படைத்து எமைவிட்டு பிரிந்த செய்தி என்றும் எமைவிட்டு நீங்காது. அன்னார் எமைவிட்டு பிரிந்து ஒருவருடமாகிறது இன்னும் அந்த பிரிவுத்துயரை தாங்காமல் வேதனையுடன் வாழும் அன்னாரின் அன்புக்கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களுக்கும் அவரின் குடும்ப உறுவுகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் மனச்சோர்வை நீக்கி ஒளிமயமான வாழ்வை தர பிரார்திப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெறவும் இறைவனை வேண்டுகிறோம்.

பா. அரியநேத்திரன் மு.பா.உ,
இலங்கை தமிழரசு கட்சி ஊடகச்செயலாளரும், மத்திய குழு உறுப்பினரும்,
பட்டிருப்பு தொகுதி தலைவரும